உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொழில்நுட்பக் கல்லுாரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி

தொழில்நுட்பக் கல்லுாரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி

புதுச்சேரி: காரைக்கால் அரசு மகளிர் தொழில் நுட்பக் கல்லுாரியில் நடந்த திறன் மேம்பாட்டு செய்முறை பயிற்சியில், ஏராளமான மாணவியர் பங்கேற்றனர்.காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு அரசு மகளிர் தொழில் நுட்பக்கல்லுாரியில், இன்ஸ்ட்ரு மென்டேஷன் அண்ட் கண்ட்ரோல் இன்ஜினியரிங் துறை சார்பில், 'சென்சார்ஸ் அண்டு டெக்னாலஜிக்கல் இனோவேஷன்' எனும் திறன் மேம்பாட்டு செய்முறை பயிற்சி நடந்தது.பயிற்சியை கல்லுாரி முதல்வர் சந்தானசாமி துவக்கி வைத்து, பேசினார். தலைமை விருந்தினர் காரைக்கால் மின்துறை செயற்பொறியாளர் விமல்குமார், பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கினார்.பயிற்சியை, ஆய்வக பயிற்றுவிப்பாளர்கள் புனிதவதி மற்றும் சங்கீதா, மாணவிகளுக்கு பயிற்றுவித்தனர். ஏற்பாடுகளை, விரிவுரையாளர்கள் விமலன் மற்றும் ராஜபாலன் ஆகி யோர் மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்