உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மண் மாதிரி சேகரிப்பு முகாம்

மண் மாதிரி சேகரிப்பு முகாம்

புதுச்சேரி, : வேளாண்துறை மற்றும் பாகூர் பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் ஆத்மா திட்டத்தின் கீழ் மண் மாதிரி சேகரிப்பு செயல்விளக்க முகாம் நடந்தது.பாகூர் கோட்ட துணை வேளாண் இயக்குனர் குமாரவேலு தலைமை தாங்கினார். பாகூர் உழவர் உதவியக வேளாண் அலுவலர் பரமநாதன், வேதியியல் பிரிவின் இணை வேளாண் இயக்குனர் தனசேகரன், துணை வேளாண் இயக்குனர் சிவசுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்று பேசினர். ஜி.பி.எஸ். கருவி உதவியுடன் விவசாய நிலங்களில் மண் மாதிரி சேகரிப்பு குறித்து விவசாயிகளுக்கு வேதியியல் பிரிவு வேளாண் அலுவலர் அனுப்குமார் தலைமையிலான குழுவினர் செயல்விளக்கம் அளித்தனர். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் முத்துகுமரன், செயல் விளக்க உதவியாளர்கள் பிரபாசங்கர், குணசீலன், செல்வமணி, ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை