மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
13 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
13 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
13 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
13 hour(s) ago
புதுச்சேரி: பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவனத்தில், அரிய ஆவண புகைப்பட சிறப்பு கண்காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவனம் பிரான்சு நாட்டின் துணையுடன் இயங்கி வருகிறது. இந்தியாவியல், சமூக அறிவியல், தொல்லியல், சூழ்நிலையியல் ஆகிய துறைகளில் ஆய்வு செய்து வருகிறது.இங்கு மூலிகை ஓவியங்கள், கோவில் நகைகள், ஓலைச்சுவடிகள் என, 1,35,629 ஒளிப்படங்களை டிஜிட்டல் மயப்படுத்தி வைத்துள்ளனர். பழங்காலத்து ஓலைச் சுவடிகளை தனி நுாலகம் வைத்துப் பாதுகாத்து வருகின்றனர். இங்குள்ள அரிய புகைப்படங்களை தொகுத்து ஆவண கனவு உலகம் என்ற தலைப்பில் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது.இதனை புகைப்பட கலைஞர் கார்த்திக்கு சுப்ரமணியன், மானிடவியல் ஆராய்ச்சியாளர் தேவரதி, வரலாற்று ஆய்வாளர் சுஜீத் ஆகியோர் ஒன்றிணைத்துள்ளனர். புகைப்பட கலைஞர் கார்த்திக் சுப்ரமணியன் கூறுகையில், பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவனத்தில் அறிவியல் ரீதியாக அணுகி அதனை புகைப்படங்களாக ஆவணப்படுத்தியுள்ளனர். இந்த ஆவணங்களை கவித்துவ நோக்கில் அணுகி, அவற்றை தொகுத்து, புதிர்களுக்கு விடை தேட முயற்சித்துள்ளோம். இதில், எங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது' என்றார்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago