உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறப்பு வரிவசூல் முகாம்: ஆணையர் ஆய்வு

சிறப்பு வரிவசூல் முகாம்: ஆணையர் ஆய்வு

திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட 42 கிராமங்களில், நேற்று வரும் ஆகஸ்ட் 31ம் தேதிவரை வரி வசூல் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி,திருக்கனுார் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அருகே வரிவசூல் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இதனைகொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் நேற்று ஆய்வு செய்தார். முகாமில், கூனிச்சம்பட்டு, கே.ஆர்.பாளையம், செட்டிப்பட்டு, மணலிப்பட்டு கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது குடிநீர், வீட்டு, சொத்து உள்ளிட்ட வரி பாக்கிகளை செலுத்தி ரசீது பெற்று கொண்டனர். முகாமில் கொம்யூன் பஞ்சாயத்துஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதுகுறித்துஆணையர் எழில்ராஜன் கூறுகையில், வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நடக்கும் சிறப்பு வரிவசூல் முகாமில், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தாங்கள்செலுத்த வேண்டிய வரி பாக்கியை செலுத்தி முறைபடுத்திக் கொள்ள வேண்டும்.முகாமில், வரி பாக்கியை செலுத்த தவறினால், வீட்டிற்கான குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படுவதுடன், சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி