மேலும் செய்திகள்
உழவர்கரை நகராட்சியில் இன்று வரி வசூல் முகாம்
09-Feb-2025
புதுச்சேரி : உழவர்கரை நகராட்சியின் சிறப்பு வரி வசூல் முகாம், நாளை தட்டாஞ்சாவடி, லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் நடக்கிறது.உழவர்கரை நகராட்சி கமிஷனர் சுரேஷ்ராஜ் செய்திக்குறிப்பு:உழவர்கரை நகராட்சி சார்பில், வீட்டு வரி, சொத்து வரி, சேவை வரி செலுத்துபவர்களுக்கான சிறப்பு முகாம் நாளை 9 ம் தேதி லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் 9 வது குறுக்கு வீதியில் நடக்கிறது. காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும் முகாமை பயன்படுத்தி, குறிஞ்சி நகர், குமரன் நகர், நாவற்குளம், அசோக் நகர், ராஜாஜி நகர் மற்றும் இதர வார்டுகளில் உள்ள வீட்டு வரி, சேவை வரி நிலுவைதாரர்கள் 2024-25ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு வரியை செலுத்தலாம்.இதேபோல், காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை தட்டாஞ்சாவடி வி.வி.பி., நகர் வீட்டு வரி வசூல் மையத்தில் சிறப்பு வரி வசூல் முகாம் நடக்கிறது. இதில், உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளில் வசிப்பவர்களும் வீட்டுவரி, சொத்துவரி, சேவை வரியை செலுத்தி, வட்டி, ஜப்தி நடவடிக்கையை தவிர்த்து கொள்ளலாம். மேலும், வரிகளை igram.py.gov.inஎன்ற இணையதள முகவரியில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாகவும் செலுத்தலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
09-Feb-2025