மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
15 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
15 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
15 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
15 hour(s) ago
புதுச்சேரி: மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி கல்வித்துறையில் உள்ள 8 வட்ட அளவில் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கால்பந்து, கைப்பந்து, கோகோ, கபடி, சதுரங்கம் உள்ளிட்ட 18 விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.இதில் தேர்வு செய்யப்பட்ட புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதியைச் சேர்ந்த 640 மாணவ மாணவிகளுக்கான இரண்டு நாள் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள், கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடந்தது.வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. 14 , 17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவுகளில் 4 வட்டம், 14 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் 2 மற்றும் 6வது வட்டம், 17 வயது ஆண்கள் பிரிவில் முதல் வட்டம், 19 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் 6வது வட்டம் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது.விளையாட்டு மற்றும் இளைஞர் நல செயலர் அமர்நாத் தல்வாடே, கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். ஏற்பாடுகளை துணை இயக்குநர் வைத்தியநாதன், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சிவக்குமார் செய்திருந்தனர்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago