உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாநில அளவிலான நீச்சல் போட்டி

மாநில அளவிலான நீச்சல் போட்டி

புதுச்சேரி, : மாநில அளவிலான 10வது நீச்சல் போட்டி, முருங்கப்பாக்கம் புதுச்சேரி ஸ்சுவிம்மிங் சென்டரில் நடந்தது. இந்திய ஸ்சுவிம்மிங் பெடரேஷன் அங்கீகரித்துள்ள புதுச்சேரி ஸ்சுவிம்மிங் டைவிங் வாட்டர் போலோ சங்கம் சார்பில் இரண்டு நாள் மாநில அளவிலான நீச்சல் போட்டி நடந்தது. இதில், 8 வயது முதல் 18 வயது வரை உள்ள 70 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சங்க செயலாளர் டாம் தோப்பன், தலைவர் ஆனந்த் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். இப்போட்டியில் தேர்வு செய்யப்பட்ட நீச்சல் வீரர்கள் வரும் ஆகஸ்ட் மாதம் புவனேஸ்வரில் தேசிய அளவில் நடக்கும் 40வது சப்ஜூனியர் மற்றும் 50வது ஜூனியர் நீச்சல் போட்டியில் பங்கேற்ற உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை