உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாநில அளவிலான யோகாசன போட்டி

மாநில அளவிலான யோகாசன போட்டி

புதுச்சேரி : புதுச்சேரி மாநில அளவிலான யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி வரும் 25ம் தேதி நடக்கிறது.சித்தர் பூமி புதுச்சேரி யோகாசன விளையாட்டு சங்க தலைவர் ஆனந்த பாலயோகி பவனானி வெளியிட்டுள்ள அறிக்கை;புதுச்சேரி சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்கம் மற்றும் யோகாசன பாரத் இணைந்து, மாநில அளவிலான யோகாசன சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துகிறது. இதில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர் சிறுவர் பிரிவிலும், 10 முதல் 14 வயது மாணவர்கள் சப்ஜூனியர் பிரிவில் போட்டியிடுகின்றனர். ஜூனியர் பிரிவில் 14 முதல் 18 வயதினரும், 18 முதல் 28 வயதினர் சீனியர் பிரிவிலும், 28 வயதிற்கு மேற்பட்டவர்கள் மாஸ்டர் பிரிவிலும் பங்கேற்கலாம். வயது 2024 மார்ச் 31ம் தேதி வரை கணக்கிடப்படும்.இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் போட்டியாளர்கள் கூகுள் படிவம் (https://forms.gle/8A8Yw2ztfv1nKeq77) பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும். முதல் 15 இடங்களில் வெற்றி பெறுபவர்கள் வரும் செப்., மாதம் நடக்கும் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறுவர். அந்தந்த பிரிவுகளில் முதல் 3 இடங்களை பிடிப்போர், அக்டோபர் நவம்பர் மாதம் நடக்கும் தேசிய அளவிலான யோகாசன சாம்பியன்ஷிப் போட்டிக்கு புதுச்சேரி சார்பில் கலந்து கொள்ளவர்.மேலும் விவரங்களுக்கு பொருளாளர் சண்முகம் 9443051616, அமைப்புச் செயலாளர் தயாநிதி 9789210593, இணை செயலாளர் பாலாஜி 9994513634 மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை