உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அ.தி.மு.க., வெற்றி பெற்றால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து; அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிச்சாமி உறுதி

அ.தி.மு.க., வெற்றி பெற்றால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து; அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிச்சாமி உறுதி

புதுச்சேரி : 'அ.தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்றால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தருவோம்' என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி உறுதி அளித்தார். புதுச்சேரி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து அவர், பேசியதாவது:புதுச்சேரி லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., வெகு நாட்களாக போட்டி யிடவில்லை. தற்போது போட்டியிடுகிறோம். புதுச்சேரிக்கு மாநில அந்துஸ்து இல்லாததால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செயல்பட முடியாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலை உள்ளது. இதை நீக்கி தனி மாநில அந்தஸ்து பெற வேண்டும். தமிழ்வேந்தனுடன் தமிழகத்தில் வெற்றி பெறும் 39 பேரும் சேர்ந்து, மாநில அந்தஸ்துக்காக அழுத்தம் கொடுத்து பெறுவர். மாநில அந்தஸ்து கிடைத்தால் தான் புதுச்சேரிக்கு உரிய நிதிப்பகிர்வு கிடைக்கும். கடந்த 43 ஆண்டுகளாக புதுச்சேரியை காங்., தி.மு.க., என்.ஆர். காங்., கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்கிறது. அவர்களால் மாநில உரிமைகைளை மீட்க முடியவில்லை. அ.தி.மு.க. வெற்றி பெற்றால் தான் உரிமையை பெற முடியும். அதற்கான தில், திராணி, தெம்பு அ.தி.மு.க.விடம் தான் உள்ளது.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கவர்னரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதிலிருந்து விடுவிக்கப்படவேண்டும். தேர்தலின்போது அளிக்கும் வாக்குறுதிகள், ஆட்சிக்கு வந்தால் கவர்னர் மனது வைத்தால் தான் நிறைவேற்ற முடியும் நிலை உள்ளது. முதல்வரால் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது.புதுச்சேரிக்கு தலைமை செயலகத்துடன் கூடிய சட்டசபை கட்டுவதிற்கான கோப்பு மத்திய அரசுக்குக்கூட அனுப்பாமல் கவர்னர் நிறுத்தி வைத்துள்ளார். புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வில்லை. புதுச்சேரி அரசு செயலற்ற அரசாக காட்சி அளிக்கிறது. தனியார் மருத்துவக்கல்லூரிகளில் இப்போது 35 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அது 50 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும்.அப்படியிருந்தால் தான் ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெற முடியும். அ.தி.மு.க., வெற்றி பெற்றால் புதுச்சேரியை சிங்கப்பூராக மாற்றி அமைப்போம். சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் புதுச்சேரியை அழகான நகராக உருவாக்க முடியும். புதுச்சேரியில் மூடிக்கிடக்கும் சர்க்கரை, நுாற்பாலைகள் திறக்க முயற்சி எடுப்போம்.கச்சா எண்ணை விலை குறைந்து இருந்தாலும் அதிக வரி விதித்து அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். நாட்டில் விலைவாசி உயர்ந்துவிட்டது. அதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு போதை பொருள் கடத்தல் பரவி விட்டது. புதுச்சேரி வளர்ச்சிபெற அடுத்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற வேண்டும். அதற்கு இந்த தேர்தல் தான் பிள்ளையார் சுழியாக இருக்க வேண்டும். புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். போதைக்கு அடிமையானவர் இந்த படுபாதக செயலை செய்துள்ளனர். இங்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். போதைப்பொருட்கள் கடத்தல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் ரேஷன் கடைகள் திறந்து மானிய விலையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கினோம். ஆனால் புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளாக ரேஷன் கடைகள் மூடி வைத்துள்ளனர். ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்பட அ.தி.மு.க., வெற்றிபெற வேண்டும். இவ்வாறு அவர், பேசினார். கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு, புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் வாள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ