உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாநில அந்தஸ்து ஒன்றே நமது உரிமைகளை பெறவழி எம்.எல்.ஏ.,க்கள் ஆவேசம்

மாநில அந்தஸ்து ஒன்றே நமது உரிமைகளை பெறவழி எம்.எல்.ஏ.,க்கள் ஆவேசம்

புதுச்சேரி: சட்டசபை விவாதம்:எதிர்க்கட்சித்தலைவர் சிவா: மத்தியில் பா.ஜ., காங்., ஆண்டாலும் சரி புதுச்சேரி மாநில அந்தஸ்து தர மனசில்லை. இதில் அரசியல் பார்க்க கூடாது. மாநில சுயகவுரவம், தன்மானம் அடங்கியுள்ளது. மாநில அந்தஸ்துக்காக முதல்வர் ரங்கசாமி கட்சி துவங்கினார்.சட்ட சபையில்தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் டில்லிக்கு செல்லாமல் அவமானப்படுத்தப்பட்ட காலம் உண்டு. இதை போக்க மாநில அந்தஸ்து தேவை. முதல்வர் இம்முறை புதுச்சேரி மக்களின் குரலாக அரசு தீர்மானமாக நிறைவேற்றி டில்லி எடுத்து சென்று தரவேண்டும்.நாஜிம் (தி.மு.க.,): தீர்மானம் நிறைவேற்றினாலும் இங்கிருந்து செல்வதில்லை. சென்றாலும் பதில் இல்லை. தீர்மானத்தை அனுப்பாமல் முதல்வர் தலைமையில் அனைவரும் டில்லியில் சென்று வலியுறுத்த வேண்டும். முதல்வர் 16 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். எங்களை விட வலி அதிகம். யார் ஆண்டாலும் அதிகாரம் தேவை. செந்தில்குமார் (தி.மு.க.,): அதிகாரத்தை தர மறுத்து யூனியன் பிரதேசமாகவே நீடிக்கிறது. செலவின பற்றாக்குறை மத்திய அரசு தந்தது. வருவாய் பற்றாக்குறை போக்க இன்றும் கொடை தரப்படுகிறது. சபாநாயகர் செல்வம்: தனிக்கணக்கு தொடங்க அப்போதைய முதல்வர் ரங்கசாமிக்கு கடும் அழுத்தம் தரப்பட்டது. சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தார். தனி கணக்கு தொடங்காவிட்டால் நிதி கிடைக்காது என்றார். சிதம்பரம், நாராயணசாமி ஆகியோர் இணைந்து புதுச்சேரியை செயல் இழக்க செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டனர். பல திட்டங்களை தடுத்து புதுச்சேரியை பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டனர். தீர்மானங்கள் இங்கு நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கே செல்லவில்லை. கடந்த முறைதான் டில்லி சென்றது.வைத்தியநாதன் (காங்.,): சென்றமுறையேகொடுக்கவில்லை. தீர்மானம் நிறைவேற்றினால் கொடுப்பார்களா.அமைச்சர் நமச்சிவாயம்; சென்ற முறை என்றால் எந்த ஆட்சி இருந்தது என்று சொல்ல வேண்டும். மாநில அந்தஸ்து விவகாரத்தில், அரசியல் பேச இடம் இல்லை.நாஜிம்(தி.மு.க.,):- மாநில அந்தஸ்து பெற்ற சபையில் தான் அடுத்த முறை முதல்வர் பட்ஜெட் தாக்கல் செய்யவேண்டும். சபாநாயகர் செல்வம்: இதை அரசியலாக்க தேவையில்லை என, எதிர்கட்சி தலைவரே சொல்லியுள்ளார்.நேரு (சுயேச்சை ): சிறிய மாநிலங்களுக்கு மாநில அந்தஸ்து தந்துவிட்டு நமக்கு டில்லியை காரணம் காட்டுகின்றனர். மக்கள் அதிகளவில் எதிர்பார்க்கின்றனர். அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி டில்லி சென்று மாநில அந்தஸ்து பெறவேண்டும்.செந்தில்குமார்(தி.மு.க.,): மாநில அந்தஸ்து விவகாரத்தில் நாம் இறுதி முடிவுக்கு வர வேண்டும். முதல்வர் ரங்கசாமி:மாநில அந்தஸ்து பெற்று தீருவோம். அரசு தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை