மேலும் செய்திகள்
பைக் திருட்டு
02-Mar-2025
அரியாங்குப்பம் : தேர் திருவிழாவில், மூதாட்டியிடம் மொபைல் மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று முன்தினம் மாலை, தேர் திருவிழா நடந்தது. விழாவில் கலந்து கொண்ட 60 வயது மூதாட்டி வைத்திருந்த துணிப்பையில் இருந்த மொபைல் போன் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மூதாட்டி, அங்கிருந்த போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.இது குறித்து தவளக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
02-Mar-2025