உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் சாதனை படைப்பு

அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் சாதனை படைப்பு

புதுச்சேரி: வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி என்ற தலைப்பில், பள்ளி - மாணவர் தங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.உப்பளம் அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில், அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சியில், புதுச்சேரியை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் கலந்து கொண்டனர். மாணவ - மாணவிகள், தங்கள் தயாரித்த அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.இந்நிகழ்ச்சியில், அரவிந்த் கல்வி அறக்கட்டளை யின் அங்கமான, மதகடிப்பட்டு, பிரைனி புளூம்ஸ் கான்செப்ட் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள், பவன், ஜெயதீர்த்தா ஆகியோர் தங்களது கண்டு பிடிப்பான மழைநீரிலிருந்து ஆடைகளைப் பாதுகாக்கும் தானியங்கி கருவியைக்கு, முதலிடம் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் நமச்சிவாயம் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை