உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சப் ரிஜிஸ்டாரரை தாக்கி பத்திரங்கள் பறிப்பு வில்லியனுார் அருகே பரபரப்பு

சப் ரிஜிஸ்டாரரை தாக்கி பத்திரங்கள் பறிப்பு வில்லியனுார் அருகே பரபரப்பு

வில்லியனுார்: வில்லியனுார் அருகே சப் ரிஜிஸ்டாரரை தாக்கி பத்திரங்களை பிடிங்கிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வில்லியனுார் அடுத்த முத்துப்பிள்ளைபாளையத்தை சேர்ந்தவர் பாஸ்கரன்; திருக்கனுார் சார் பதிவாளர் அலுவலகத்தில் சப் ரிஜிஸ்டராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு 8:30 பணியை முடித்துவிட்டு திருக்கனுாரில் இருந்து பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பர் பரசுராமனும் மற்றொரு பைக்கில் வர இருவரும் பேசிக்கொண்டே பத்துக்கண்ணு நோக்கி சென்று கொண்டிருந்தனர். வழுதாவூர் அடுத்த கூனிமுடக்கு பகுதியில் வந்தபோது பின்னால் ஒரே பைக்கில் முகமூடி அணிந்து வந்த மூன்று மர்ம நபர்கள், பரசுராமனின் பைக்கை எட்டி காலால் உதைத்து தள்ளினர். நிலை தடுமாறி பரசுராமன் பைக், சப் ரிஜிஸ்டர் பாஸ்கரன் பைக் மீது மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர்.அப்போது மர்ம நபர்கள் பாஸ்கரன் பைக்கில் வைத்திருந்த பையை எடுத்துக்கொண்டனர். பையை கேட்டபோது, பாஸ்கரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து, தப்பிச் சென்றனர். பையில் நீதிமன்றம் சம்பந்தமான ஆவணங்கள் மற்றும் சில பத்திரங்களும் வைத்திருந்தார்.பாஸ்கரன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை