உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 7 சார் பதிவாளர்கள் திடீர் இடமாற்றம்

7 சார் பதிவாளர்கள் திடீர் இடமாற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி பத்திரப்பதிவுத்துறையில் பணியாற்றி வரும், 7 சார் பதிவாளர்கள், இடமாற்றம் செய்யப்பட்டனர்.புதுச்சேரி பதிவாளர் அலுவலகத்தில், கிராம பிரிவில் பணியாற்றிய சார்பதிவாளர் ரவிச்சந்திரன் மற்றும் திருமண பிரிவில் பணியாற்றிய ஸ்ரீகாந்த் ஆகியோர், திருக்கனுாருக்கு மாற்றப்பட்டனர்.திருக்கனுார் பாஸ்கர் புதுச்சேரி திருமண பிரிவிற்கும், உழவர்கரை சார் பதிவாளர் பாலமுருகன் வில்லியனுாருக்கும் மாற்றப்பட்டனர்.வில்லியனுார் கார்த்திகேயன் உழவர்கரைக்கும், காரைக்கால் நிரவி சார் பதிவாளர் திருநள்ளாறுக்கும் மாற்றப்பட்டனர். திருநள்ளாறில் பணியாற்றிய நடராஜன், நிரவிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை, மாவட்ட பதிவாளர் தயாளன் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை