உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் தொல்காப்பியருக்கு தமிழ்ச்சான்றோர்கள் மரியாதை

புதுச்சேரியில் தொல்காப்பியருக்கு தமிழ்ச்சான்றோர்கள் மரியாதை

புதுச்சேரி: புதுச்சேரியில் தமிழ்ச்சான்றோர்கள் தொல்காப்பியர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.புதுச்சேரி தமிழ்ச்சான்றோர் பேரவையின் சார்பில், நேற்று காலை 10:00 மணிக்கு, பேரவை நிறுவனர் நெய்தல் நாடன் தலைமையில் முழுமதி நாள் மலர் வணக்கம் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில் முருகுமணி வரவேற்றார். வந்தவாசி அரசு கலைக்கல்லுாரி தமிழ்த்துறைத் தலைவர் எழில்வசந்தன், புதுச்சேரித் தன்னுரிமைக் கழகத் தலைவர் சடகோபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள தொல்காப்பியரின் உருவச் சிலைக்குப் தமிழ்ச்சங்கச் செயலர் சீனு மோகன்தாசு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். தாகூர் கலை அறிவியல் கல்லுாரித் தமிழ்த்துறைத் தலைவர் ரேவதி 'தொல்காப்பியம் ஒரு வாழ்வியல் இலக்கியம்' எனும் தலைப்பில் பேசினார். முடிவில் தமிழ்ச் சங்க பொருளாளர் திருநாவுக்கரசு நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பேராசிரியர் கோவலன், நுாலகர் அரசேந்திரன், விரிவுரையாளர் சிவராமன், மாசிலாமணி, ஞானமூர்த்தி, விரிவுரையாளர் சுந்தரமூர்த்தி, முத்து ஐயாசாமி, வீர முருகையன், குமரவேல் உள்ளிட்ட தமிழ்ச்சான்றோர் தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை