உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தமிழக பா.ஜ,., செயலாளர் முதல்வருடன் சந்திப்பு

தமிழக பா.ஜ,., செயலாளர் முதல்வருடன் சந்திப்பு

புதுச்சேரி,: தமிழக பா.ஜ., மாநில செயலாளர் அஸ்வத்தாமன் முதல்வர் ரங்கசாமியை சட்டசபையில் சந்தித்து, ரயில் பாதை அமைக்க கோரிக்கை வைத்தார்.மத்திய பட்ஜெட்டில் செங்கல்பட்டு - மகாபலிபுரம் - புதுச்சேரி - கடலுார் வழித்தடம் வழியாக ரயில் தடம் அமைக்கப்படும் என, அரசு அறிவித்து நிதி ஒதுக்கப்பட்டது. வழிப்பாதை தொடர்பாக புதுச்சேரி அரசு அட்சேபனைகளை தெரிவித்துள்ளதால் இந்த திட்டம் தடைபட்டுள்ளது. புதுச்சேரி அரசும், ரயில்வே நிர்வாகமும் ஒருமித்த கருத்தாக மாற்று பாதையையோ அல்லது தற்போதுள்ள பாதையையோ முடிவு செய்தால் தான் இந்த திட்டம் மீண்டும் தொடங்கும் . ஆகவே புதுச்சேரி அரசு அலைமெண்ட் தொடர்பான விஷயங்களை சரி செய்து தர வேண்டும் என, கேட்டுக் கொண்டார். முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை