உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கிராமங்களுக்கு செல்ல சிறப்பு பஸ் ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

கிராமங்களுக்கு செல்ல சிறப்பு பஸ் ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

புதுச்சேரி : ஆசிரியர்கள் கிராமப்புற பள்ளிகளுக்கு செல்ல, சிறப்பு பஸ் வசதியை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என, புதுச்சேரி யூனியன் பிரதேச பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் துளசி அறிக்கை: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், 2024-25ம் ஆண்டு முதல், தாய்மொழி தமிழுடன் கூடிய, சி.பி.எஸ்.இ., கல்வி முறை, 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரைஅமல்படுத்தப்படும் என்ற, அரசின் முடிவை வரவேறகிறோம்.வரும் முதல் முழு ஆண்டுத்தேர்வில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற, இப்போதே திட்டமிடல் வேண்டும். மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்திட, ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.காலியாக உள்ள அனைத்து பதவிகளையும் வரும், செப்., மாதத்திற்குள் நிரப்பிட வேண்டும். வரும், 15ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும், ஒரே நேரத்தில் தொடங்கி முடிக்க வேண்டும் என, சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு முழுவதுமாக செயல்பட மாணவர்களுக்கு கிராமப்புற பள்ளிகளுக்கு செல்ல, சிறப்பு பஸ் இயக்கப்படுவது போல, ஆசிரியர்களும் சரியான நேரத்திற்குள் சென்றிட, பி.ஆர்.டி.சி., மூலம் சிறப்பு பஸ்களை பாகூர், பி.எஸ்.பாளையம், திருக்கனுார், நெட்டப்பாக்கம், மடுகரை, கூனிச்சம்பட்டு போன்ற பகுதிகளுக்கு ஏற்படுத்தி தர வேண்டும். இது குறித்து கவர்னர், முதல்வர், கல்வி அமைச்சர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை