உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாரதா கங்காதரன் கல்லூரியில் டெக்னவோ நிகழ்ச்சி

சாரதா கங்காதரன் கல்லூரியில் டெக்னவோ நிகழ்ச்சி

புதுச்சேரி : சாரதா கங்காதரன் கல்லூரி தகவல் தொழில் நுட்பத் துறை சார்பில், ஐ டெக்னவோ 24 (ITechnova24) என்ற நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரி துணைத் தலைவர் பழனிராஜா துவக்க உரையாற்றினார். கல்லுாரி முதல்வர் பாபு வாழ்த்துரை வழங்கினார். தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் ஜான் ஜேக்கப் அறிக்கை வாசித்தார். உதவி பேராசிரியர் அமுதா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.விழுப்புரம் அரசு கல்லுாரி கணினி துறை தலைவர் மணவாளன், 'மெடிக்கல் இமேஜ் பிராசசிங்' என்ற தலைப்பில் பேசினார்.அம்மச்சூர் கிக் பாக்ஸின் அசோசியேஷன் தலைவர் அசோக் கலந்து கொண்டு மாணவர்கள் தன்னம்பிக்கையோடு தன்னை தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து பேசினார். விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.ஏற்பாடுகளை தகவல் தொழில்நுட்பத் துறை உதவி பேராசிரியர்கள் சூர்யகலா, கமலக்கண்ணன், ரங்கநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி