உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறுவர்களை தாக்கிய வாலிபர் கைது

சிறுவர்களை தாக்கிய வாலிபர் கைது

அரியாங்குப்பம்: சிறுவர்களை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.அரியாங்குப்பம் பி.சி.பி., நகரை சேர்ந்தவர் பாலாஜி, 28; இவர் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள காலியான இடத்தில் நேற்று மது குடித்தார். அந்த இடத்தில் திடீரென மர்ம நபர்கள் கற்களை வீசியுள்ளனர். இது தொடர்பாக அந்த வழியாக சென்ற சிறுவர்கள், பிரியன், 16; குமலேஸ், 16; ஆகியோரிடம் கேட்டு அவர்களை பாலாஜி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.இதுகுறித்து, சிறுவர்களின் பெற்றோர் கொடுத்த பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, பாலாஜியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை