உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

புதுச்சேரி: லாஸ்பேட்டை அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். லாஸ்பேட்டை ஏர்போர்ட் அருகே நரிக்குறவர் காலனிப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் நேற்று அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபரை பிடித்து விசாரித்து, சோதனை செய்தனர். இதில் அவர் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரணை செய்ததில், நரிக்குறவர் காலனியை சேர்ந்த பிரபு, 20; என தெரியவந்தது. அவரிடமிருந்து 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 15 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ