உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரளி விதை சாப்பிட்டு  வாலிபர் தற்கொலை

அரளி விதை சாப்பிட்டு  வாலிபர் தற்கொலை

புதுச்சேரி, : அரளி விதை சாப்பிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.பாகூர் அடுத்த சேலியமேடு பள்ளிக்கூட வீதியை சேர்ந்தவர் ராஜாராம் மகன் சசிதரன் 33; கள்ளக்குறிச்சியில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். மது குடித்து வந்ததால், கடந்த ஆண்டு இவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு பின், மருத் துவர்கள், மீண்டும் மது குடித்தால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என எச்சரித்து அனுப்பினர்.மீண்டும் கள்ளக்குறிச்சிக்கு வேலைக்கு சென்ற அவர், மது குடித்ததால், உடல் நிலை பாதிக்கப்பட்டது. கடந்த மாதம் ஜிப்மரில் 10 நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இருப்பினும், அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டார்.நேற்று முன்தினம் இரவு வலி அதிகமானதால், அரளி விதையை அரைத்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் அவரை மீட்டு, பாகூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.டாக்டர் பரிசோதித்து, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை