உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சர்வதேச தரத்தில் விளையாட்டு பயிற்சி அளிக்க மத்திய அரசு அளித்த ரூ. 1 கோடி பணம் திருப்பி அனுப்பிய புதுச்சேரி அரசு

சர்வதேச தரத்தில் விளையாட்டு பயிற்சி அளிக்க மத்திய அரசு அளித்த ரூ. 1 கோடி பணம் திருப்பி அனுப்பிய புதுச்சேரி அரசு

புதுச்சேரி : புதுச்சேரி மாணவர்களை ஒலிம்பிக் போட்டிக்கு தயார் செய்யும் வகையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கேலோ இந்திய விளையாட்டு பயிற்சி திட்டத்தை செயல்படுத்த அளித்த முன்பணம் ரூ. 1 கோடியை மாநில அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மக்கள் தொகை 15 லட்சம். இதில், 1.5 லட்சம் மாணவர்கள் உள்ளனர். பள்ளி கல்லுாரி அளவில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் விளையாட்டு பயிற்சி மூலம் தேசிய அளவில் மட்டுமே நம் மாணவர்கள் கால் பதிக்கின்றனர். அதை தாண்டி உலக அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க அதிநவீன வசதிகளுடன் கூடிய பயிற்சி களம், பயிற்சியாளர்கள் புதுச்சேரியில் இல்லை.இந்த குறையை சரிசெய்ய, மத்திய அரசு இன்டர்நேஷனல் தரத்துடன் கூடிய பயிற்சி அளிக்க கேலோ இந்தியா ஸ்டேட் சென்டர் ஆப் எக்ஸ்லன்ஸ் என்ற திட்டத்தை அறிமுகம் செய்து, புதுச்சேரியை தேர்வு செய்தது.இதன் மூலம் திறமை மிக்க 20 ஆண்கள், 20 பெண்கள் தேர்வு செய்து, தடகளம், பேட்மிட்டன், பளு துாக்கும்போட்டிக்கு சர்வதேச தரத்தில் தொடர் பயிற்சி அளிக்கப்படும். இதற்கான பயிற்சி தளம், தேசிய அளவிலான பயிற்சியாளர்கள், விளையாட்டு அறிவியல் லேப் உள்ளிட்ட அதிநவீன வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.சர்வதேச பயிற்சியாளர்களையும் கேலோ இந்தியா அமைப்பே தேர்வு செய்து அனுப்பி வைக்கும். பயிற்சி தளம், பயிற்சியாளர்கள், உணவு, தங்குமிடம், பயிற்சி உபகரணங்கள் என ரூ.10 கோடி வரை மத்திய அரசு செலவிடும்.இதற்கு புதுச்சேரியில் இத்திட்டதை துவக்க கடந்த 2021ம் ஆண்டு முன்பணமாக ரூ.1 கோடியை கொடுத்தது. திட்டத்தை செயல்படுத்த வேண்டிய மாநில அரசின் உப்பளம் மைதானத்தில் உள்ள ராஜிவ்காந்தி விளையாட்டு பள்ளி இத்திட்டத்தை செயல்படுத்தாமல் 2 ஆண்டுகளாக பணத்தை வைத்திருந்ததால், கடந்த 2023ம் ஆண்டு மத்திய அரசின் விளையாட்டு ஆணையத்திற்கு கொடுத்த பணத்தை திருப்பி அனுப்பியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை