உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தீவிரமடையும் டாக்டர்கள் போராட்டம் நோயாளிகள் தொடர் அவதி

தீவிரமடையும் டாக்டர்கள் போராட்டம் நோயாளிகள் தொடர் அவதி

புதுச்சேரி, : புதுச்சேரி ஜிப்மரில், 2வது நாளாக பணி புறக்கணிப்பில் ஈடுபட்ட நிலையில், கதிர்காமம் மற்றும் அரசு மருத்துவமனை டாக்டர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேற்கு வங்க மாநில தலைநகர் கோல்கட்டாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுநிலை பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த இரு வாரங்களுக்கு முன், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.இதனை கண்டித்து நாடு முழுதும் டாக்டர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரியில், ஜிப்மர் டாக்டர்கள், நேற்று முன்தினம் கால வரையின்றி வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கினர். இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.நேற்று காலை 6:00 மணி முதல் இன்று காலை 6:00 மணி வரை நாடு முழுதும் டாக்டர்கள், வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், ஜிப்மர் டாக்டர்கள், நேற்று இரண்டாவது நாளாக பணி புறக்கணிப்பு பேராட்டத்தை தொடர்ந்தனர். இதையொட்டி, காலை 6:00 மணிக்கு போராட்டம் துவங்கியது.ஜிப்மர் டாக்டர்களுக்கு ஆதரவாக, மருத்துவக்கல்லுாரி பேராசிரியர்களும், மருத்துவ மாணவர்களும், போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜிப்மர் நுழைவு வாயில் அருகில் கோரிக்கை அட்டைகளை ஏந்தி, முகத்தில் விழிப்புணர்வு வாசகங்களுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.இதனால், வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்கவில்லை. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் நேற்றும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். ஆனாலும், அவரச சிகிச்சை பிரிவு மற்றும் பிரசவ வார்டுகள் மட்டும் இயங்கின.அதேபோல அவசர அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன. அதேசமயத்தில், நேற்று நடக்க இருந்த அவசர சிகிச்சைகள் வேறு தேதிக்கு மாற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து நேற்று மாலை 6:00 மணிக்கு, ஜிப்மர் நுழைவு வாயலில் இருந்து, சுப்பையா நகர் பிரதான சந்திப்பு வரை, ஜிப்மர் டாக்டர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி அரசு மருத்துவமனை டாக்டர்கள், நேற்று போராட்டம் செய்தனர். வெளிப்புற சிகிச்சையை, முடித்து மருத்துவமனை நுழைவு வாயில் முன்பு காலை 8:00 மணி முதல் 9:00 மணி வரை ஆர்ப்பாட்டம் செய்தனர்.கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனையிலும் டாக்டர்கள் காலை 9:30 மணி முதல் காலை 10:30 மணி வரை, போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ