உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சூதாட்டத்தில் பணம் இழந்த பொறியாளர் தற்கொலை செய்தி அனுப்பிவிட்டு மாயம்

சூதாட்டத்தில் பணம் இழந்த பொறியாளர் தற்கொலை செய்தி அனுப்பிவிட்டு மாயம்

காரைக்கால் : காரைக்காலில் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணம் இழந்த ஒ.என்.ஜி.சி., பொறியாளர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.காரைக்கால், திருநள்ளார் மாடவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 28; மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி., நிறுவன பொறியாளர். கடந்த 31ம் தேதி ராமநாதபுரத்தில் நடக்கும் பணியை பார்வையிட செல்லவதாக கூறிச் சென்றார். 2 நாள் கடந்தும் வீடு திரும்பவில்லை.மணிகண்டன் சகோதரி பிரனாம்பாள் மொபைல்போனுக்கு, மணிகண்டன் குறுஞ்செய்தி அனுப்பினார். அதில், நான் அதிக கடன் வட்டிக்கு வாங்கி ஆன்லைனில் சூதாட்டம் விளையாட்டில் அதிக பணத்தை இழந்துவிட்டேன். கடன் கொடுத்த நபர்கள் வட்டி பணம் கேட்டு தொந்தரவு செய்வதுடன், வேலையை பறிப்பதாக மிரட்டுகின்றனர். எனது குடும்பம் எனது வருமானத்தை நம்பி உள்ளது. நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல வருமானம். ஆனால் மன வலிமை இல்லாமல் இறந்து போகிறேன். இந்த கடிதம் கிடைக்கும்போது நான் உயிருடன் இருக்க மாட்டேன். எனது சடலம் பவானி சாகர் அணையில் கிடக்கும். உடலை மீட்டு வீட்டில் ஒப்படைக்கவும் என எழுதப்பட்டு இருந்தது. மேலும் தான் எவ்வளவு பணம் கடன் பெற்ற தகவல்களையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து திருநள்ளார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பொறியாளர் உயிரை மாய்த்து கொள்ள போவதாக கடிதம் அனுப்பிவிட்டு மாயமாகிய சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ