உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்தடையை கண்டித்து சாலை மறியல் கிராம மக்களை சமரசம் செய்த மாஜி முதல்வர்

மின்தடையை கண்டித்து சாலை மறியல் கிராம மக்களை சமரசம் செய்த மாஜி முதல்வர்

திருக்கனுார்: குமராபாளையத்தில் மின் தடையை கண்டித்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்தார்.திருக்கனுார் அடுத்த தேத்தாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் இயங்கி வந்த இரண்டு பவர் டிரான்ஸ்பார்மர் மூலம் திருக்கனுார் மற்றும் காட்டேரிக்குப்பம் பகுதிகளை சுற்றியுள்ள 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்விநியோகம் வழங்கப்படுகிறது.இதில் ஒரு பவர் டிரான்ஸ்பார்மர் கடந்த ஜனவரி 16ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சேதமடைந்தது. அதனை இதுவரை சீரமைக்கவில்லை. இதனால், இப்பகுதியில் உள்ள கிராமங்களில் தினசரி பல மணி நேரம் தொடர் மின்தடை ஏற்பட்டு, பொது மக்கள் சிரமம் அடைந்தனர்.இதனிடையே, தேத்தாம்பாக்கம் துணை மின் நிலையம் அருகே உள்ள குமாரப்பாளையம் கிராமத்தில் நேற்று மாலை 5:00 மணிக்கு ஏற்பட்ட மின்தடை பல மணி நேரம் நீடித்தது. அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகள் மின் தடையின்றி இயங்கியது.இதனால், ஆத்திரமடைந்த குமாரப்பாளையம் கிராம மக்கள் இரவு 7:00 மணியளவில் மூன்று முனை சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காட்டேரிக்குப்பம் போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதனிடையே, விழுப்புரத்தில் காங்., நிர்வாகி ஒருவரின் சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவ்வழியாக காரில் வந்த முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் காரும், மறியலில் சிக்கியது.காரில் இருந்து இறங்கிய அவர், கிராம மக்களின் கோரிக்கையை கேட்டறிந்து, மின்துறை அதிகாரிகளை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசினார். மின்துறை அதிகாரிகள் வரும் திங்கள் கிழமைக்குள் மின்தடையை சரி செய்து விடுவதாக தெரிவித்தனர்.அதற்குள் மின்தடையை சரி செய்யவில்லை எனில், நானே நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபடுவேன் என, தெரிவித்தார். இதையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர், முன்னாள் முதல்வர் நாராயணசாமி அங்கிருந்து, புறப்பட்டு சென்றார். சாலை மறியல் காரணமாக திருக்கனுார்- பத்துக்கண்ணு செல்லும் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ