உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வேலை வாய்ப்பு வழங்குவதில் அரசு தோல்வி அடைந்துள்ளது அங்காளன் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு

வேலை வாய்ப்பு வழங்குவதில் அரசு தோல்வி அடைந்துள்ளது அங்காளன் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு

புதுச்சேரி: சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதத்தில் அங்காளன் எம்.எல்.ஏ., பேசியதாவது;கவர்னர் உரையில் பெரிய வளர்ச்சி திட்டம் ஏதும் குறிப்பிடவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் அரசு தோல்வி அடைந்துள்ளது. ஆண்டுதோறும் பொறியியல் முடித்து 5 ஆயிரம் பேர் வெளியே வருகின்றனர். இவர்கள் வெளிமாநிலத்திற்கு சென்று வேலை தேடும் சூழல்உள்ளது. கூட்டணி ஆட்சி என கூறிகொண்டு டில்லி செல்லாமல் இருந்தால் எப்படி நிதி பெற முடியும்.போலி சான்றிதழ் கொடுத்து விவசாய கடன் பெற்றுள்ளனர். உண்மையான விவசாயிகளுக்கு கடன் தர வேண்டும்.மின்துறை தனியார் மயம், மின் கட்டண உயர்வால் ஏற்பட்டமக்களின் கோபமே தேர்தல் தோல்விக்கு காரணம்.பட்டா வழங்கலில் டிஜிட்டல் முறையை கொண்டு வர வேண்டும். கொம்யூன் பஞ்சாயத்து நீர்நிலைகள் துார்வார போதிய அளவிலான நிதியை உள்ளாட்சித்துறைக்கு ஒதுக்க வேண்டும்.திருபுவனை, திருக்கனுார் போலீஸ் நிலையங்களில் காவலர் எண்ணிக்கை உயர்த்த வேண்டும்.இலவசங்கள் கொடுப்பதிற்கு பதில் பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். ஆசிரியர் நியமனம், ஸ்மார்ட் கிளாஸ் எண்ணிக்கை அதிகரிக்கவேண்டும். வக்பு வாரியத்திற்கு சேர்மன் நியமித்து செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை