மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
21 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
21 hour(s) ago
புதுச்சேரி : காமராஜர் கல் வீடு கட்டும் திட்டத்தில் உயர்த்தப்பட்ட மானிய தொகை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் கனவு திட்டமான காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தில் அளிக்கப்படும் நிதியை விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உயர்த்தி வழங்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தில், காமராஜர் கல் வீடு கட்டும் திட்டத்திற்கு அளிக்கும் நிதி ரூ. 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அதையடுத்து மானிய தொகை உயர்வு அறிவிப்பை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், சட்டசபையில் நடந்தது.குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன் தலைமை தாங்கினார். குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். கல்வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நிலுவையில் வழங்கப்படாமல் உள்ள தொகை, புதிதாக விண்ணப்பிப்போருக்கு மானிய தொகை உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்துதல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
21 hour(s) ago
21 hour(s) ago