உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வ ா க்காளர்களின் எண்ணிக்கை புதுச்சேரியில் 1 0.23 லட்சமாக உயர்வு

வ ா க்காளர்களின் எண்ணிக்கை புதுச்சேரியில் 1 0.23 லட்சமாக உயர்வு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் 1.1.2024 ஐ தகுதி நாளாக கொண்டு, 30 தொகுதிகளின் புகைப்பட வாக்காளர் பட்டியலில் சுருக்குமுறை திருப்பணி கடந்த அக்.9ம் தேதி முதல் டிசம்பர் 9 ம் தேதி வரை நடந்தது. ஜனவரி 5ம் தேதி அனைத்து பணிகளும் நிறைவடைந்து 2024ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நேற்று புதுப்பிக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் வெளியிட்டார். இதில் மொத்தம் 10 லட்சத்து 23ஆயிரத்து 699 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 5 லட்சத்து 42 ஆயிரத்து 979 பெண்களும், 4 லட்சத்து 80 ஆயிரத்து 569 ஆண்களும், மூன்றாம் பாலினத்தவர் 151 பேரும் உள்ளனர்.இதில் முதல்முறை வாக்காளர்கள் 28, 921 பேர் உள்ளனர். சேவை வாக்காளர்கள் 325 பேரும், வெளிநாடு வாழ் வாக்காளர்கள் 368 பேரும் உள்ளனர். இரண்டு மாநில வாக்காளர்களாக கருதப்பட்டோர் நீக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை காட்டிலும் 2,785 வாக்காளர்கள் கூடுதலாகி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ