உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சடலத்தை மாற்றி கொடுக்க முயற்சி உறவினர்கள் கலெக்டரிடம் புகார்

சடலத்தை மாற்றி கொடுக்க முயற்சி உறவினர்கள் கலெக்டரிடம் புகார்

காரைக்கால்: காரைக்காலில் இறந்தவர் சடலத்தை மாற்றி கொடுக்க முயன்ற போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் கலெக்டரிடம் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூர் மாவட்டம், இளவங்கார்குடி ஊராட்சி, தொழுவனங்குடி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 52; தென்னை மரம் ஏறும் தொழிலாளி. இவர் காரைக்கால் பகுதியில் தங்கி வேலை செய்து வந்தார்.கடந்த சில நாட்களுக்கு முன், ராஜேந்திரன் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்திற்கு நகர போலீசார் தகவல் தெரிவித்தனர். பின், அவரது உடலை காரைக்காலில் அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர். நேற்று முன்தினம் காரைக்கால் வந்த ராஜேந்திரன் மகன் ராஜி மற்றும் உறவினர்கள் அரசு மருந்துவனைக்கு சென்றனர். அவர்களிடம் ராஜேந்திரன் உடலுக்கு பதில் போலீசார் வேறு ஒருவரின் சடலத்தை காட்டியுள்ளனர்.ஆத்திரமடைந்த ராஜேந்திரனின் உறவினர்கள் நகர போலீசாரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, வேறு உடலை வழங்க முயன்ற போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த ராஜேந்திரன் உடலை பெற்று தர வேண்டும் எனக் கோரி கலெக்டர் அலுவலத்தில் உறவினர்கள் மனு அளித்தனர். இறந்தவரின் உடலை மாற்றி கொடுக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்