உள்ளூர் செய்திகள்

மாணவி மாயம்

புதுச்சேரி, : பாட்டி வீட்டுக்கு சென்ற மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.தொண்டமாநத்தம் மீனாட்சி அம்மன் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் தவமணி, இவரது மகள் அனிதா, 18, இவர் சுல்தான்பேட்டையில் உள்ள தனியார் நர்சிங் கல்லுாரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவரை காணவில்லை. இதுகுறித்து அவரது தாய் தவமணி கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ