உள்ளூர் செய்திகள்

மாணவி மாயம்

புதுச்சேரி: கல்லுாரி சென்றபோது மாயமான மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி முத்துப்பிள்ளைபாளையம், பாலாஜி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு. ஜிப்மரில் செயல்படும் ஒப்பந்த நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மகள் சுபத்ரா, 19; புதுச்சேரியில் உள்ள அரசு பெண்கள் கல்லுாரியில் பி.ஏ., 2ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை கல்லுாரி செல்ல சுபத்ராவை தனது பைக்கில் அழைத்து வந்து மூலக்குளம் பஸ் நிறுத்தத்தில் இறக்கி விட்டு சுரேஷ்பாபு வேலைக்கு சென்றார். இரவு வரை சுபத்ரா வீடு திரும்பவில்லை. தோழிகள் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை