பெண்ணை தாக்கியவர் கைது
அரியாங்குப்பம் : தோட்டத்தில் ஆடு மேய்ந்ததில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு புதுநகரை சேர்ந்தவர் மணி. இவரது மகள் மைதிலி, 29; இவர் வளர்த்த ஆடு, அதே பகுதியில் உள்ள, பாரிதமிழன் வீட்டில் தோட்டத்தில் மேய்ந்தது. இது தொடர்பாக பாரிதமிழன், மைதிலியை கண்டித்தார் இதில், இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அதில், ஆத்திரமடைந்த, பாரிதமிழன், அவதுாறாக பேசி மைதிலியை தாக்கினார். புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து பாரிதமிழன், 44; கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.