உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தில்லையாடி வள்ளியம்மை பள்ளி கோ- கோ போட்டியில் முதலிடம்

தில்லையாடி வள்ளியம்மை பள்ளி கோ- கோ போட்டியில் முதலிடம்

புதுச்சேரி புதுச்சேரி இரண்டாம் வட்டத்தை சேர்ந்த பள்ளிகளுக்கு இடையிலான, மாணவிகள் கோ-கோ போட்டியில், தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது.பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், கதிர்காமம், தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப்பள்ளி திடலில், 14 வயதிற்கு உட்பட்ட, பள்ளி மாணவ-மாணவிகளுக்கான, கோ-கோ போட்டி, நேற்று முன்தினம் துவங்கி நடந்து வருகிறது.இதில் இரண்டாம் வட்டத்தை சேர்ந்த, 12 அரசுப்பள்ளிகள் மற்றும் 9 தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர். இதில், முதல் பரிசு தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப் பள்ளி; இரண்டாம் பரிசு, கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் மூன்றாம் பரிசை ஸ்டான்ஸ்போர்டு மேல்நிலைப் பள்ளியும் பெற்றன.இதனை தொடர்ந்து மாணவர்களுக்கான போட்டியில், 10 அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள் 9, என மொத்தம், 19 பள்ளிகள் கலந்து கொண்டன. இதில் அரையிறுதிக்கு, வி.வி.ஆர்.எஸ் அரசு உயர்நிலைப்பள்ளி, தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப்பள்ளி, ஆயி அம்மாள் அரசு நடுநிலைப்பள்ளி, ஸ்டான்ஸ்போர்டு மேல்நிலைப்பள்ளி தகுதி பெற்றுள்ளன. இன்று இறுதிப்போட்டி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை