உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளியில் புலிகள் தினம்

அரசு பள்ளியில் புலிகள் தினம்

புதுச்சேரி : பண்ட சோழநல்லுார் திருவருட்பிரகாச வள்ளலார் அரசு நடுநிலைப்பள்ளியில் புலிகள் தினம் கொண்டாடப்பட்டது.பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில், சர்வதேச புலிகள் தினம் கொண்டாப்பட்டது. நாட்டு நலப்பணித்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சத்தியவதி வரவேற்றார்.மையம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் கங்காதரன் புலிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.அதனை தொடர்ந்து, வினாடி வினா போட்டியில் வெற்றி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. காய்கறி, கீரை வகைகள் வழங்கி மாணவர் களுக்கு விழிப்புணர்பு ஏற்படுத்தப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் சுவாமிராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ