உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

புதுச்சேரி : புதுச்சேரியில் அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:புதுச்சேரியில் வெப்பம் காரணமாக விடுமுறை விடப்பட்டது. இதனை ஈடுசெய்ய12 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும் என்று கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இன்று சனிக்கிழமை விடுமுறை நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும் இன்று இயங்காது.இந்த நாளுக்கான மாற்று தினம் பின்னர் அறிவிக்கப்படும். மேலும், கடந்த ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் பணிபுரிந்த ஆசிரியர்கள் நடப்பு ஆண்டில் எந்த நாளில் வேண்டுமானாலும் பதில் விடுப்பை எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்