உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் இன்று ராமநவமி உற்சவம்

பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் இன்று ராமநவமி உற்சவம்

புதுச்சேரி : பஞ்சவடீ கோவிலில் ராம நவமி உற்சவம் இன்று நடக்கிறது.திண்டிவனம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஞ்சவடீயில், 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள பட்டாபிேஷக ராமர் சன்னதியில் ராம நவமி உற்சவம், கடந்த 13ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.அன்றைய தினம் காலையில், யாகசாலையில் விசேஷ ேஹாமங்கள் 7 காலமும் நடந்தது. இதையடுத்து, 14ம் தேதி துவங்கி காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும், நேற்று வரை ராமச்சந்திர மூர்த்திக்கு விசேஷ லட்சார்ச்சனை நடந்தது. இன்று காலை 8:30 மணிக்கு, 7ம் கால யாக சாலை பூஜை நடக்கிறது. இதையடுத்து, 36 அடி ஆஞ்சநேய சுவாமிக்கு, 2 ஆயிரம் லிட்டர் பால், பன்னீர் மற்றும் வாசனை திரவியங்களால், விசேஷ திருமஞ்சனம் நடக்க உள்ளது. பின்னர், யாகசாலையில் மகா பூர்ணஹூதி நடைபெற்று கடம் புறப்படாகி, பட்டாபிேஷக ராமர் சன்னதியில் ப்ரோக்க்ஷணம் நடக்கிறது. தொடர்ந்து, ஆஞ்சநேயர் சன்னதியில் கட திருமஞ்சனம் நடக்கிறது. மதியம் 12:30 மணிக்கு, விசேஷ வாசனை மலர்களை கொண்டு புஷ்ப விருஷ்டி, அர்ச்சனை மற்றும் திருவாராதனம் நடக்கிறது. மாலை 4:30 மணிக்கு சீதா ராம திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













புதிய வீடியோ