உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நாளை நரசிம்ம ஜெயந்தி விழா

லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நாளை நரசிம்ம ஜெயந்தி விழா

புதுச்சேரி: லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நாளை நரசிம்ம ஜெயந்தி விழா நடக்கிறது.முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் லட்சுமி ஹயக்ரீவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஜ்வாலா நரசிம்மர், அகோபில நரசிம்மர், மாலோல நரசிம்மர், வராக நரசிம்மர், காரஞ்ச நரசிம்மர் என 11 நரசிம்ம உற்சவர்கள் அருள்பாலிக்கின்றனர்.இந்த கோவிலில் நாளை, 13வது ஆண்டு, நரசிம்ம ஜெயந்தி விழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு, காலை 10:00 மணிக்கு 11 நரசிம்மர் உற்சவர்களுக்கும் பால், தயிர், இளநீர் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் விசேஷ திருமஞ்சனம் நடக்கிறது.மாலை 7:00 மணியளவில், 11 நரசிம்மர்களும் தேரில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, வேத ஆகம சம்ப்ரக் ஷன லட்சுமி சரஸ் மாருதி டிரஸ்ட் நிர்வாகிகளும், உற்சவதாரர்களும் செய்துள்ளனர். விழாவில் திரளாக பங்கேற்குமாறு பக்தர்களுக்கு டிரஸ்ட் நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி