உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

புதுச்சேரி : கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த இரண்டாம் கட்ட தேர்தல் காரணமாக புதுச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகள் வரத்து நேற்று வெகுவாக குறைந்திருந்தது.வார இறுதி நாட்களில் புதுச்சேரிக்கு வரும் வெளிமாநில சுற்றுலா பயணிகளில் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக புதுச்சேரி மற்றும் அருகிலுள்ள தமிழக பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. வார இறுதி நாட்களுக்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமை மாலையே சுற்றுலாப் பயணிகள் குவிந்து விடுவர்.இந்நிலையில் நேற்று கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடந்தது. இதனால் புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்பட்டது. இதனால் புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகளில் 200க்கும் குறைவான அறைகள் மட்டுமே நிரம்பி உள்ளதாக விடுதி உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதேபோல் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தமிழகம் - புதுச்சேரியில் நடந்த தேர்தலால் சுற்றுலா பயணிகள் வருகையின்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி