| ADDED : மே 20, 2024 04:34 AM
அரியாங்குப்பம், : முருங்கப்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதியடைந்தனர்.கடலுார் சாலை முருங்கப்பாக்கம் பகுதியில், பொதுப்பணித்துறை மூலம் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்தது வருகிறது. சாலையோரத்தில் பள்ளம் தோண்டும் பணியால், அவ்வழியாக தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.முகூர்த்த தினத்தையொட்டி, நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில், முருங்கப்பாக்கம் வழியாக சென்ற வாகனங் கள் அணிவகுத்து சென்றன. மேலும், வார விடுமுறை நாளான சனிக்கிழமை என்பதால், சுற்றுலா பயணிகள் சென்றதால், மரப்பாலத்தில் இருந்து அரியாங்குப்பம் வரை வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால், பைக்கில் சென்றவர்கள் கூட செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.எப்போதும் போக்குவரத்து நெரிசலில் இருக்கும் முருங்கப்பாக்கம் பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணியை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.