உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போக்குவரத்து விதிமுறைகள்: மாணவர்களுக்கு துண்டு பிரசுரம்

போக்குவரத்து விதிமுறைகள்: மாணவர்களுக்கு துண்டு பிரசுரம்

புதுச்சேரி: போக்குவரத்து போலீசார் சார்பில், போக்குவரத்து விதிமுறைகள் குறித்த, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.புதுச்சேரி கடற்கரை சாலையில் நேற்று நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சிறப்புவிருந்தினராக பங்கேற்ற ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா துண்டு பிரசுரத்தை, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.பின்னர் அவர், இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, கண்டிப்பாக ெஹல்மெட் அணிவது, போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிப்பது குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சீனியர் எஸ்.பி.,க்கள் அனிதாராஜ், சுவாதிசிங், பிரவீன்குமார் திரிபாதி, நாரா சைத்னயா, கிழக்கு எஸ்.பி., செல்வம் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், எஸ்.பி., வீரவல்லவன், போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ