உள்ளூர் செய்திகள்

பயிற்சி முகாம்

நெட்டப்பாக்கம்: வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, ஆத்மா திட்டம் சார்பில், இயற்கை விவசாயம் குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் கரையாம்புத்துார் கிராமத்தில் நடந்தது.வேளாண் அலுவலர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். உதவி வேளாண் அலுவலர் கெங்காதுரை மன்புழு மூலம் இயற்கை விவசாயம் தாயரிக்கும் முறைகள் குறித்து விளக்கினார். தொடர்ந்து முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு மண்புழு உரம் வழங்கப்பட்டது.முகாமில் கரையாம்புத்துார், சின்ன கரையாம்புத்துார், மனமேடு, கடுவனுார் கிராமத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.ஆத்மா திட்ட மேலாளர் பக்தவச்சலம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை