உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பேராசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

பேராசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

புதுச்சேரி: காலப்பட்டு டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரியில், மத்திய அரசின் நீதித்துறை அமைச்சகத்தின் நியாய ஒளி திட்டம் சார்பில் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து பயிற்சி முகாம் நடந்தது.கல்லுாரி முதல்வர் சீனிவாசன் வரவேற்றார். தலைமை விருந்தினராக புதுச்சேரி சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலாளர் அம்பிகா, சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா ஆகியோர் பயிற்சியை துவக்கி வைத்தனர். சட்டக் கல்லுாரி உதவி பேராசிரியர்கள் விஜயன், கவுசலேந்திர பிரதாப் சிங், புதுச்சேரி பல்கலைக்கழக சட்டப்பள்ளி துறைத் தலைவர் குர்மிந்தர் கவுர் ஆகியோர் 3 புதிய சட்டங்கள் குறித்து விளக்கினர். பயிற்சியில் 100க்கும் மேற்பட்ட பேராசிரியர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை