உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

புதுச்சேரி : புதுச்சேரியில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை ஓட்டுச்சாவடி அதிகாரிகளுக்கு பயிற்சி முகாம்கள் பல்வேறு இடங்களில் நடந்தன. அதன் ஒரு பகுதியாக, முத்தியால்பேட்டை, உப்பளம், ராஜ்பவன், ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய தேர்தல் நடத்தும் அதிகாரியான கந்தசாமி தலைமையில், தேர்தலை நடத்தும் அதிகாரிகளுக்கு நேற்று அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி, உப்பளம் இமாக்குலட் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் பயிற்சி முகாம் நடந்தது. முகாமில், ஓட்டுச்சாவடி, அலுவலர்கள், அதிகாரிகள் என 200க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ