அரசு பள்ளியில் முப்பெரும் விழா
பாகூர் : பாகூர் பேட் அரசு துவக்கப் பள்ளியில், வாசிப்பு திருவிழா, மகளிர் தின விழா மற்றும் மரம் நடும் விழா என முப்பெரும் விழா நடந்தது.தலைமை ஆசிரியர் நாகராஜன் தலைமை தாங்கினார். மூன்றாம் வட்ட பள்ளி துணை ஆய்வாளர் லிங்கசாமி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து, மாணவர்களின் கற்றல் மற்றும் வாசித்தல் திறனை ஆய்வு செய்து, பரிசு வழங்கினார். இதில், மாணவர்கள் தங்கள் வாசிப்பு திறனுடன், நாடகம், கதை கூறுதல், திருக்குறள் ஒப்புவித்தல் திறமைகளை வெளிப்படுத்தினர்.மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவர்களின் பெற்றோர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.