உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இரட்டையர்கள் ஆர்வமுடன் ஓட்டளிப்பு

இரட்டையர்கள் ஆர்வமுடன் ஓட்டளிப்பு

புதுச்சேரி புதுச்சேரி லோக்சபா தேர்தலில் இரட்டை சகோதரிகள் சிமினா, விமினா ஆர்வமுடன் ஓட்டளித்தனர். முத்தியால்பேட்டை வ.உ.சி., நகரை சேர்ந்தவர் சேகரன். இவருக்கு இரட்டையர்கள் சிமினா, விமினா, 19, என மகள்கள் உள்ளனர். இந்த சகோதரிகள் ஒரு நிமிட வித்தியாசத்தில் பிறந்தவர்கள்.இருவரும் முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லுாரியில் பி.எஸ்சி., இயற்பியல் இரண்டாம் ஆண்டு படிக்கின்றனர். அவர்கள் நேற்று முதல் முறையாக முத்தியால்பேட்டை வாசவி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடியில் ஆர்வமுடன் ஓட்டளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்