உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆபாசமாக பேசிய இருவர் கைது

ஆபாசமாக பேசிய இருவர் கைது

புதுச்சேரி : பொது இடத்தில் ஆபாசமாக பேசிய இருவரை போலீசார் கைது செய்தனர்.முதலியார்பேட்டை நைனார் மண்டபம் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 57. முத்தியால்பேட் வி.ஒ.சி.நகரைச் சேர்ந்தவர் ஜெயபால், 57. இருவரும், நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில், மது குடித்துவிட்டு ஆம்பூர் சாலையில், நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொது மக்களிடம் ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பெரியக்கடை போலீசார், தகராறில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ