மேலும் செய்திகள்
கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
10-Mar-2025
புதுச்சேரி: உருளையன்பேட்டையில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர்.உருளையன்பேட்டை, தென்னஞ்சாலை ரோட்டில் வாலிபர் ஒருவர், அவ்வழியாக செல்லும் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி வருவதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.உதவி சப்இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கத்தியுடன் நின்று ரகளை செய்த பெரியார் நகரை சேர்ந்த பிராங்க்ளின், 19; கைது செய்து கையில் வைத்திருந்த கத்தி, பைக்கில் மறைத்து வைத்திருந்த மற்றொரு கத்தியும் பறிமுதல் செய்தனர். அதேபோல், உருளையன்பேட்டை, அரேபியன் மந்தி ஹோட்டல் அருகே கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய சிவா என்ற குட்டி சிவா, 35; என்பவரையும் போலீசார் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
10-Mar-2025