உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனநிலை பாதித்தவரிடம் அத்து மீறிய இருவர் கைது

மனநிலை பாதித்தவரிடம் அத்து மீறிய இருவர் கைது

கிள்ளை : மனநிலை பாதித்த சிறுவனிடம், பாலியல் ரீதியாக அத்துமீறிய இருவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.கிள்ளை பகுதியை சேர்ந்த மனநிலை பாதித்த 16 வயது சிறுவனை, கடந்த 27ம் தேதி வடக்குச்சாவடியை சேர்ந்த 15 வயது சிறுவன் மற்றும் நஞ்சைமகத்து வாழ்க்கை கிராமத்தை சேர்ந்த விஷ்வா, 21; ஆகியோர் பனங்காடு கிராமத்திற்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக அத்துமீறினர்.இதுகுறித்த புகாரின்பேரில், கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் சங்கர் போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து, விஷ்வா, 21; மற்றும் சிறுவனை கைது செய்தனர். இதில், சிறுவன் கடலுார் அரசு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை