மேலும் செய்திகள்
காட்சிப்பொருளான ஹைமாஸ் விளக்கு
30-Aug-2024
அரியாங்குப்பம் : தவளக்குப்பம் சாலையில் மது குடிப்பதால், பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடந்து வருகின்றனர்.தவளக்குப்பம் அபிேஷகப்பாக்கம் செல்லும், பெரன்ஸ் வில்லா, ஸ்ரீ அரவிந்தர் நகர், தெப்பக்குளம் ஆகிய குடியிருப்பு பகுதியில் மக்கள் வசித்து வருகின்றனர். தவளக்குப்பம் மது கடையில் இருந்து மது வாங்கி வந்து, நள்ளிரவு வரை அந்த பகுதிகளில் சாலையில் அமர்ந்து மது குடித்து வருகின்றனர். இதனால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.தவளக்குப்பம் போலீஸ் நிலையம் அருகே அந்த இடங்களில் தினமும் மது குடிப்பவர்களை போலீசாரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இரவு நேரங்களில் அந்த பகுதி திறந்து வெளி பாராக இருப்பதால், நடந்து செல்வதற்கே பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.அப்பகுதி மக்கள் தவளக்குப்பம் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் போலீசார், ஊர் முழுவதும் பார்கள் திறந்து வைத்தால், எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர். சாலையில் அமர்ந்து மதுகுடிப்பவர்களை மீது நடவடிக்கை எடுக்கவும், இரவு நேரங்களில் போலீஸ் ரோந்து பணியில் சென்று கண்காணிக்கவும் போலீஸ் உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
30-Aug-2024