உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சீருடை வழங்கும் நிகழ்ச்சி

சீருடை வழங்கும் நிகழ்ச்சி

நெட்டப்பாக்கம்: கீழ் அக்ரகாரம் அரசு நடுநிலைப் பள்ளியில் விளையாட்டு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தலைமையாசிரியர் சுபாங்கி தலைமை தாங்கி, விளையாட்டு விழாவினை துவக்கி வைத்தார். ஆசிரியர் ஹரிஹரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பளராக ஒய்வு பெற்ற விமானப்படை அதிகாரி சம்பத் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விளையாட்டுக்கு தேவையான சீருடைகளை வழங்கினார். ஆசிரியை வனிதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் அய்யனாரப்பன், உதயசங்கர், சவிதா, செல்வகுமார், சத்யவாணி, கலா ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ